Thursday, November 8, 2012

12.12.2012 STRIKE MEETINGS - 19.11.12 DEMONSTRATION

அன்புத் தோழர்களே  வணக்கம்.


ஏழாவது ஊதியக்குழு, 50% பஞ்சப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல், 5 கட்ட பதவி உயர்வு  உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை  வலியுறுத்தி  எதிர் வரும் 12.12.2012 அன்று  நடைபெற உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர் களின் வேலை நிறுத்தத்தை ஒட்டி நாடு தழுவிய அளவில்  மண்டல  வாரியாக ஆயத்தக் கூட்டங்கள்  நடத்திட நமது  சம்மேளனம் மற்றும் அகில இந்திய சங்கங்கள் தாக்கீது  அனுப்பியுள்ளன.

அதன் படி  கீழ்க் கண்ட தேதிகளில்  நான்கு மண்டலங்களிலும்  ஆயத்தக் கூட்டங்கள் நடைபெறும் . எனவே  இதற்கான  ஏற்பாடுகளை  நான்கு மண்டலங்களிலும் உள்ள  மாநிலச் சங்க நிர்வாகிகள், தலைமட்ட கோட்ட/ கிளைச் செயலர்களுடன் கலந்து கொண்டு , தல மட்டத்தில் உள்ள NFPE  இன் உறுப்புச் சங்கங்களின் பொறுப்பாளர்களையும்  ஒருங்கிணைத்து  மிகச் சிறப்பாக கூட்டங்களை  நடத்திட வேண்டுகிறோம். ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள கோட்டங்களில் இருந்து  அதன் பொறுப்பாளர்கள் ஊழியர்களைத் திரட்டிட வேண்டுகிறோம்.


(மண்டலப் பொறுப்பாளர்கள்/மண்டல தலைமையகத்தில் உள்ள கோட்டச் செயலர்கள்   அகில இந்திய சங்க நிர்வாகிகளின் தங்கும்  இட ஏற்பாடுகளை செய்து தர கேட்டுக் கொள்கிறோம்.அவர்களது CELL  NO . அளிக்கப் பட்டுள்ளது)

விழுப்புரம்  HPO (பாண்டி கோட்டம் ) -    18.11.2012  ஞாயிறு மதியம் 02.00 மணி 
கோவை  தலைமை அஞ்சலகம்         -     21.11.2012  புதன் மாலை   06.00     மணி  
மதுரை    தலைமை  அஞ்சலகம்        -  22.11.2012  வியாழன் மாலை 06.00 மணி
திருச்சி  தலைமை அஞ்சலகம்           -  23.11.2012  வெள்ளி மாலை 06.00    மணி   
சென்னை CPMG  அலுவலக வளாகம் - 24.11.2012  சனி  மாலை 06.00          மணி 

கலந்து கொள்ளும் சம்மேளன/அகில இந்திய சங்க நிர்வாகிகள் :-

தோழர்கள் 
C. சந்திரசேகர் , செயல்  தலைவர் , NFPE  9944922122
S . ரகுபதி, உதவி மாபொதுச் செயலர், NFPE 9444454518
A . வீரமணி , உதவி பொதுச் செயலர், AIPEU  GRC 9444208159
T . ரமேஷ் 
M .B . சுகுமார், உதவி பொதுச் செயலர் R 3
S .K . ஹுமாயுன்  P IV 09440840889
கோபு கோவிந்தராஜன்  P IV 9840503018
C .H . கோட்டீஸ்வர ராவ் R III 09951908490
K . ராஜேந்திரன்  R  IV 9486815032
P . நாகராஜன் ADMIN 9445316820
ரகுபதி உமாசங்கர்  ADMIN 9445155041
T .P . ரவீந்திரன்   POSTAL  ACCOUNTS 9447009846
R .தனராஜ்  GDS  NFPE .9442475290
K .C . இராமச்சந்திரன்  GDS NFPE 9442534718
S . முருகையா  SBCO 9787825724


தமிழ் மாநில  இணைப்புக் குழு சார்பாக  இது சம்பந்தமாக  சுற்றறிக்கை  அனுப்பப் படும்.  அதே போல  அனைத்து கோட்ட/கிளைகளிலும்  சுற்றறிக்கை வெளியிட்டு  அதன் நகலை அனைத்து உறுப்பினர்களுக்கும், மாநிலச் செயலருக்கும்   அனுப்பிட  வேண்டுகிறோம்.

இன்றைய தேதியில் இருந்தே  ஒவ்வொரு கோட்ட/ கிளைகளிலும்  வேலை நிறுத்த  ஆயத்தக் கூட்டங்கள்  நடத்தி  ஊழியர்கள் மத்தியில்  போராட்ட உணர்வை ஏற்படுத்த வேண்டுகிறோம். நவம்பர் இறுதிக்குள் முடியும் வண்ணம்  வேலை நிறுத்த ஆயத்த பணிகளை  விரைவு படுத்திட வேண்டுகிறோம்.

எதிர் வரும் 19.11.2012 அன்று  வேலை நிறுத்தத்திற்கான  சட்ட பூர்வமான  நோட்டிசை அனைத்து மத்திய அரசு ஊழியர் அமைப்புகள் மூலம் அவரவர்கள்  இலாக்காகளில்  அளிக்க உள்ளனர்.  NFPE  சார்பில் அனைத்து பொதுச் செயலர்களும் DG  அலுவலகம் முன்பாக மாபெரும்  ஆர்ப்பாட்டம் நடத்தி  வேலை நிறுத்த நோட்டிசை  இலாக்கா முதல்வருக்கு அளிக்க உள்ளார்கள்.

அதே தேதியில்  மாநிலங்களிலும்  அனைத்து மாநிலச் செயலர்களும்  உணவு இடைவேளையில்  ஆர்ப்பாட்டம் நடத்தி  வேலை நிறுத்த நோட்டிசை CPMG  இடம் வழங்க உள்ளார்கள்.

எனவே  எதிர்வரும் 19.11.2012 அன்று அனைத்து கோட்ட/ கிளைகளிலும்  மாபெரும் ஆர்ப்பாட்டக் கூட்டங்களை  நடத்திட வேண்டுகிறோம்.  பத்திரிகை , தொலைகாட்சி  நிருபர்களை அழைத்து  செய்திகளை வெளியிடச் செய்திட வேண்டுகிறோம்.


போராட்ட களம் நோக்கி புயலென புறப்படுவீர் ! மத்திய அரசு ஊழியர்களுக்கு  ஒரு முன் மாதிரியான இயக்கம்  இதுவென  காட்டுவீர் ! 1960 , 1968 ஊதியக் குழுக்கான போராட்டங்களில்  NFPE  முன் நின்றதுபோல  தற்போதும் சரித்திரம் படைப்போம்!

போராட்ட வாழ்த்துக்களுடன் 
J . ராமமூர்த்தி , மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று.

GET READY FOR THE BIGGEST STRIKE OF ENTIRE
CENTRAL GOVERNMENT EMPLOYEES

We Demand:
1.         Appoint Seventh Pay Commission for revision of wages of Central Government Employees including Gramin Dak Sevaks from 01.01.2011.
2.         Grant merger of 50% DA to all including Gramin Dak Sevaks from 01.01.2011.
3.         Remove restrictions on Compassionate appointments.
4.         Departmentalization of GDS and grant them all benefits of regular employees. Revise cash handling norms; withdraw open market recruitment in Postmen/MTS, Grant full protection of TRCA. Grant Time bound promotions. Implement Medical reimbursement Scheme etc.
5.         End Bonus discrimination and enhance the bonus ceiling of GDS to 3500/-
6.        Regularize the Casual, Part-time, contingent employees and grant revise pro-rata wages from 1.1.2006.
7.         Revise Overtime allowance and Night Duty allowance.       
8.         Stop downsizing, outsourcing, Contractorisation and privatization.
9.         Grant Five promotions to all.
10.       Implement all Arbitration awards.
11.       Ensure prompt functioning of JCM at all levels.
12.       Withdraw PFRDA Bill.
13.       Stop price rise and strengthen public distribution system.
14.       Withdraw all trade union victimization.
15.       Enact laws to grant Right to Strike to Government employees.

 12.12.12 ALL INDIA STRIKE – WHY?
                   PRICES                                                    :     UP           
               GROWTH                                                 :     STUCK
     UNEMPLOYMENT                                  :    RISING
     REAL WAGES                                         :    ERODED
     PRICE INDEX                                          :    FAULTY
     WAGE REVISION                                    :    OVERDUE
              GDS DEPARTMENTALISATION          :    DENIED
    CASUAL LABOUR WAGES                    :    NOT REVISED
    CADRE RESTRUCTURING                    :    DELAYED
             OUTSOURCING, CONTRACTORISATION     :    RAMPANT
   CAREER PROGRESSION                       :    PREJUDICED
   NEW PENSION SCHEME                        :    TRADE & GAMBLING
            COMPASSIONATE APPOINTMENT      :    REFUSAL
            OVERTIME ALLOWANCE                       :    MISERABLE
            FUNCTIONING OF JCM                           :    FAILING & DEFUNCT
  ARBITRATION AWARDS                          :    DISRESPECT
  BONUS CEILING                                       :    UNREASONABLE
           TRADE UNION VICTIMISATION              :    VENGEANCE
  RIGHT TO STRIKE                                    :    STILL DENIED

 
WHAT IS THE WAY OUT – STRUGGLE, ONLY STRUGGLE
 
STRIKE!    STRIKE!!   STRIKE!!!
 
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES

ALL INDIA CONFERENCE – BOOKING OF JOURNEY TICKETS
Hurry UP

Dear Comrades,

You are aware that All India Conference is scheduled to be held in Thiruvananthapuram, Kerala from 10.03.2013 to 12.03.2013. All delegates should reach the AIC Venue on 09.03.2013 afternoon so that we can complete the formalities of credential etc and commence the Conference sharp as notified. Similarly, the return can be made only on 13.03.2013 (i.e.) after the conclusion of the conference.

Railway Reservation starts four months in advance. There are no more trains available and there will always be heavy rush/demand in trains. As such the train tickets shall be booked well in advance.

Please rush your reservation from today onwards. Intimate the names & phone number of comrades who are attending well in advance to CHQ & Recieption Committee.

With fraternal greetings,
R. SIVANNARAYANA
GENERAL SECREARY AIPEU GRC CHQ.