Tuesday, February 4, 2014

TN CONFEDERATION STRIKE MEETING HELD AT TEYNAMPET ON 03.02.2014

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  தமிழக வட்டத்தின்,   பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறவுள்ள 48 மணி நேர வேலை நிறுத்தம் குறித்த ஆயத்தக் கூட்டம் 03.02.2014  அன்று சென்னை  தேனாம்பேட்டை BEFI  சங்கக் கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

கூட்டத்திற்கு  மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் தோழர். J .  இராம மூர்த்தி அவர்கள் தலைமையேற்று வேலை நிறுத்தம் குறித்த  செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.  மகா சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் அவர்கள்  கூட்டத்தினரை வரவேற்றதுடன் , தமிழக மகா சம்மேளனத்தின் வேலை நிறுத்த  ஆயத்தக் கூட்டங்கள் குறித்தும் வேலை நிறுத்த அவசியம் குறித்தும்  விளக்கமாக எடுத்துரைத்தார் . தொடர்ந்து  மகா சம்மேளனத்தின் முன்னாள் அகில இந்திய உதவித் தலைவரும்  அஞ்சல் மூன்றின்  முன்னாள் பொதுச் செயலருமான  தோழர்  KVS   அவர்கள் வேலை நிறுத்தக் கோரிக்கைகள் குறித்தும்  தற்போதைய  அரசின் நிலை குறித்தும்  விரிவாக விளக்கி தனது உரையினை அளித்தார் .

வேலை நிறுத்த ஆயத்தக் கூ ட்டத்தின் சிறப்புப் பேச்சாளராக  வருகை புரிந்த  மத்திய அரசு  ஊழியர்  மகா சம்மேளனத்தின் அகில இந்திய மாபொதுச்  செயலரும்  நமது சம்மேளனத்தின் மாபொதுச்  செயலருமான தோழர்.  M . கிருஷ்ணன் அவர்கள்,  இரண்டாவது ஊதியக் குழு தொடங்கி  இன்றைய ஏழாவது ஊதியக் குழு வரை  மகா சம்மேளனத்தின் பங்கினை சிறப்பாக எடுத்துரைத்தார்.  தற்போதைய  மத்திய அரசு ஊழியர்கள் தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பு மூலம் GDS  ஊழியர்களது கோரிக்கைகளை  அரசுக்கு அளித்துள்ள TERMS OF  REFERENCE  இல் எடுத்துச் சென்ற விதம் குறித்தும் , 15 அம்சக் கோரிக்கைகளின்  அவசியம் குறித்தும் வேலை நிறுத்த ஏற்பாடுகள் அகில இந்திய முழுமைக்கும்  தீவிரப் படுத்தப் பட்டுள்ள தன்மை குறித்தும்  விளக்கமாக  ஒரு நீண்ட  நெடிய உரை  ஆற்றினார்.  

கூட்டத்திற்கு  மத்திய அரசுத்துறைகளின் அனைத்துப் பகுதி சங்கங்களில் இருந்தும்  கிட்டத்தட்ட 300 தோழிய / தோழர்கள் வந்திருந்தது  சிறப்பு சேர்த்தது.  நமது  தமிழ் மாநில NFPE  இன் உறுப்பு சங்கங்களின் மாநிலச் செயலர்கள்  தோழர்கள்  . கோபு  கோவிந்தராஜன்,  சங்கரன் , சந்தோஷ்குமார், ரகுபதி உமாசங்கர், அப்பன்ராஜ் , தனராஜ்  உள்ளிட்ட  அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகளும் ,  சம்மேளனத்தின்  உதவிப் பொதுச் செயலர் தோழர். ரகுபதி,  அஞ்சல் மூன்றின் செயல் தலைவர் ் தோழர்..N . கோபாலகிருஷ்ணன், உதவிப் பொதுச் செயலர் தோழர். வீரமணி  ஆகியோரும் வருகை தந்து சிறப்பு சேர்த்தனர். 

இறுதியாக  தமிழக மகா சம்மேளனத்தின்  உதவித் தலைவர்  தோழர். சாம்ராஜ் அவர்கள் நன்றி கூற வேலைநிறுத்தக் கூட்டம் இனிதே நிறைவுற்றது. கூட்டத்தில் சில புகைப் படக் காட்சிகள்  கீழே பார்க்கவும் :-