Friday, August 1, 2014

KOVILPATTI P3 & P4 JOINT DIVISIONAL CONFERENCE

கோவில்பட்டி கோட்டம் அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு சங்கங்களின் இணைந்த கோட்ட மாநாடு கடந்த 27.7.14 ஞாயிறு காலை துவங்கி கோவில் பட்டி தலைமை அஞ்சலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பொருளாய்வுக்  குழு மற்றும் நிர்வாகிகள் தேர்தல் தனியே நடைபெற்றாலும் பொது அரங்கு நிகழ்ச்சி ஒன்றாகவே நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு  அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர். H . சுவாமிநாதன் அவர்களும் , அஞ்சல் நான்கின் தலைவர் தோழர். G . கண்ணன் அவர்களும்  கூட்டுத் தலைமையேற்க , அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர். S . பொன்னுசாமி வரவேற்புரை யாற்றினார். 

மாநாட்டு பொது அரங்கு நிகழ்வில்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R ., மாநிலத் தலைவர் தோழர். ஸ்ரீ வெங்கடேஷ் , தென் மண்டலச் செயலர் தோழர். R .V . தியகராஜபாண்டியன் , NFPE  GDS  சங்க மாநிலத் தலைவர் தோழர்.S . ராமராஜ்,  அஞ்சல் நான்கின் தென் மண்டலச் செயலர் தோழர். முருகேசன்,  அஞ்சல் மூன்றின்  தென்காசி கிளைச் செயலர் தோழர். S . சண்முகவேல்,  அஞ்சல் நான்கின்  கோட்டச் செயலர்கள் - மதுரை  தோழர் ராஜ்மோகன் , விருதுநகர் தோழர். சோலையப்பன்,  தூத்துக்குடி தோழர். ராஜேந்திரன்  உள்ளிட்ட நிர்வாகிகளும்,  அஞ்சல் -RMS  ஓய்வூதியர் சங்கத்தின் அகில இந்திய சங்க நிர்வாகி தோழர். வீரண்ணன் , தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர்  சுப்பையா உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொண்டு வாழ்த்திப்பேசினர்.

ஈராண்டு அறிக்கை, வரவு செலவு கணக்கு ஒப்புதல் பெற்றபின் போட்டி யின்றி நிர்வாகிகள் தேர்தல்  நடைபெற்றது.  கீழ்க் கண்ட தோழர்கள்  நடப்பு ஈராண்டுக்கான  புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.  இவர்களின் பணி சிறக்க அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.  

அஞ்சல் மூன்று 
 தலைவர்                     :  தோழர். S . பொன்னுசாமி, P .A ., கோவில்பட்டி HO 
கோட்டச் செயலர்   :  தோழர். A . அருள்ராஜன், P .A ., கோவில்பட்டி HO 
நிதிச் செயலர்            :  தோழர். L . கேசவன் , P .A .,  திருவேங்கடம்  S.O.

                                                                  அஞ்சல் நான்கு 
தலைவர்                 : தோழர். J.ஜான்சி ராணி , தபால்காரர், கோவில்பட்டி HO  
கோட்டச் செயலர்: தோழர். C . பெரியசாமி, தபால்காரர், கோவில்பட்டி HO  
நிதிச் செயலர்  : தோழர். K.சிவமுருகேசன், தபால்காரர், கோவில்பட்டி HO
  
மாநாட்டில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களை கீழே பார்க்கலாம்.