Monday, August 11, 2014

MINUTES OF THE BI-MONTHLY MEETING WITH THE PMG, WR HELD ON 17.07.2014

மேற்கு மண்டலத்தின் நீண்டகாலப் பிரச்சினைகளின் தீர்வு நோக்கி !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் . மேற்கு மண்டலத்தில் நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த பிரச்சினைகளை PMG WR  அவர்களிடம் அளித்து   அதன் தீர்வுக்கான பதிலைப் பெற்று (19 PAGES ) மேற்கு மண்டலத்தின் அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் ஏற்கனவே நாம் அனுப்பியிருந்தோம். 

இதன் தொடர்ச்சியாக , மேற்கு மண்டலத்தில்  நிரந்தமான அதிகாரி இல்லாததால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு   இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி  கடந்த 17.07.2014 அன்று  நடைபெற்றதால், இதில்  நாம் அதிகப் படியான  பிரச்சினைகளை அளித்து விவாதிக்கக் கோரினோம்.

3 SUBJECT  மட்டுமே PERMISSIBLE  என்றாலும் கூட  PMG WR  திருமதி  மஞ்சு பிள்ளை  அவர்கள் , நாம் அளித்த அனைத்து பிரச்சினைகளையும் விவாதித்து பதில் அளித்தார். அதில் பல பிரச்சினைகள் தீர்வாகி உள்ளன. பல பிரச்சினைகளில் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அதன் நகலை கீழே உங்களின் பார்வைக்கு அளித்துள்ளோம்.  தோழர்கள் அனைவருக்கும் தெரியப் படுத்தவும்.