Monday, September 29, 2014

ANOHER CHANCE GIVEN FOR ABSENTEES TO APPEAR FOR COMPUTER SKILL TEST IN TAMILNADU.. THANKS TO COM. KRISHNAN, RESPECTED DPS HQ AND CHIEF PMG, TN.

நன்றி !  நன்றி !!

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். 

கடந்த சனியன்று மாலை சுமார் 06.00 மணியளவில்  மாநிலச் சங்கத்திற்கு பல தோழர்களிடமிருந்து  ஒரு புகார் வந்தது . அதாவது தமிழக முதல்வர் அவர்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக தமிழகமெங்கும்  பேருந்துகள்  நிறுத்தப்பட்டன. ஞாயிறு அன்று P.A. தேர்வுக்கு  ஏற்கனவே  COMPUTER  SKILL  டெஸ்ட் அறிவிக்கப் பட்டிருந்தது உங்களுக்குத் தெரியும்.  உரிய TRANSPORT  வசதி இல்லாதால் தொலை தூரங்களில் இருந்து  COMPUTER  SKILL TEST  தேர்வுக்கு , குறிப்பாக கோவைக்கு  பயணம் செய்ய இயலாததால் அந்த தேர்வினை தள்ளி வைக்கவேண்டும் என்பதே இந்த புகாரின் சாரம் ஆகும்,

எனவே உடனடியாக இரவு 07.00 மணியளவில் நம் மாநிலச் செயலர்  DPS  HQ  திரு. கோவிந்தராஜன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  இதன் மீது ஆவன நடவடிக்கை வேண்டினார்.  இந்த தேர்வு  DIRECTORATE  மூலம்  அறிவிக்கப்  பட்டிருப்பதாலும்  தேர்வை  CMC  என்ற தனியார் நிறுவனம் நடத்துவதாலும்  மாநில நிர்வாகத்தால் உடன்  நேரடி நடவடிக்கை  எடுக்க இயலாதென்பதை  தெரிவித்தார்.  

இருந்த போதிலும் இந்த பிரச்சினை குறித்து  CPMG அவர்கள் கவனத்திற்கும்  DDG  ESTT  அவர்கள் கவனத்திற்கும் உடன் கொண்டு செல்வதாக அவர் உறுதி அளித்தார். அதன்படியே  இரவு நேரத்தில்  DTE  இன்  உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு  தேர்வினை ரத்து செய்யுமாறும் இல்லையென்றால்   ABSENTEE  களுக்கு வேறு ஒரு நாளில்  தேர்வு எழுதிட அனுமதிக்குமாறும் வேண்டியதாக நம்மிடம் இரவு 09.00 மணிக்கு தெரிவித்தார்.

இதே நேரத்தில் நம் மாநிலச் செயலர்  மதுராவில் இருந்த நம்முடைய  சம்மேளனத்தின் முன்னாள் மாபொதுச்  செயலர் தோழர். M . கிருஷ்ணன் அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினையில்  உடன் கவனம் செலுத்துமாறு வேண்டினார். அவரும் ஒரு மணி நேரத்தில்  நிச்சயம் பதில் அளிப்பதாக உறுதி அளித்தார். இதன் படியே  தோழர். கிருஷ்ணன் அவர்கள்  MEMBER  HR  அவர்களையும் DDG  ESTT  அவர்களையும்  தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினையைத் தீர்த்திட வேண்டினார்.  

இதன் படியே இரவு 10.30 மணியளவில்  மீண்டும்  நம் மாநிலச் செயலரிடம் தோழர் கிருஷ்ணன் அவர்கள் , பிரச்சினையைத் தீர்த்திட உரிய உத்திரவு CMC க்கு  அளிக்கப் பட்டுள்ளதாகவும்  அதன் மீது மாநில நிர்வாகத்திடம் பேசி நிலைமையை தெரிவிக்குமாறும்  நம் மாநிலச் செயலரிடம் தெரிவித்தார். 

இரவு 10.45 க்கு நம் மாநிலச் செயலர்  அவர்கள்  நம்முடைய DPS  HQ  அவர்களிடம் இந்த DEVELOPMENT  ஐத் தெரிவித்து ஆவன மேற்கொள்ள வேண்டினார்.  அந்த இரவு நேரத்திலும்  உடன்  நடவடிக்கை எடுப்பதாக  DPS  HQ  அவர்கள் நம் மாநிலச் செயலரிடம் தெரிவித்தார்.  மேலும் இந்த செய்தி நம்முடைய  சங்கத்தின் முக்கியமான நிர்வாகிகளுக்கு இரவு 11.00 மணியளவில் நம்முடைய மாநிலச் செயலரால்  SMS  மூலம்  தேர்விக்கப் பட்டது .

அதன்படியே  தேர்வில் கலந்துகொள்ள ஞாயிறு ஆண்டு வந்திருந்த சுமார் 350 பேருக்கு தேர்வு நடத்தியும் ,  வர இயலாமல் ABSENT  ஆன சுமார் 150 பேருக்கு மீண்டும் 30.09.2014 அன்று தேர்வு நடத்திட அறிவிப்பும் வெளியிடப் பட்டதாக இன்று நம் மாநிலச் செயலரிடம்  DPS HQ  திரு . கோவிந்தராஜன் அவர்கள் தெரிவித்தார். அதன்படியே  தேர்வுக்கான வலைத்தளத்தில் அதிகார பூர்வமாக இந்த  அறிவிப்பு வெளியிடப்பட்டது.  அதன் நகலை கீழே பார்க்கவும் :-


Update as on September 28, 2014

IMPORTANT: For Candidates of Paper II (Computer Skill Test) at Tamil Nadu Postal Circle, who could not appear in the exam sessions on 28 September 2014 at the Coimbatore exam venue, have opportunity to appear on September 30, 2014 on First cum First Serve basis at the same exam venue in the morning sessions beginning 0900hrs. Same Admit Card will be valid.

இரவு நேரமான போதிலும் , விடுமுறை தினமானபோதிலும் , நம்முடைய கோரிக்கையை ஏற்று உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு , ABSENTEE  களுக்கு  தேர்வு எழுதிட மேலும் ஒரு CHANCE  பெற்றிட DIRECTORATE  இல் உள்ள உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு  ஏற்பாடுகள் செய்த  நம்முடைய  DPS  HQ  திரு. கோவிந்தராஜன் அவர்களின் மனிதாபிமான மிக்க செயல் பாராட்டுக் குரியது.   அவருக்கும் அவரது செயலுக்கு  உரிய உத்திரவு தந்த நம்முடைய CHIEF  PMG திரு. T. முர்த்தி அவர்களுக்கும்  ஊழியர்கள் சார்பாகவும் நம் மாநிலச் சங்கத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றி !

எந்த நேரத்தில் தொடர்பு கொண்டாலும், எங்கே இருந்த போதிலும் உடன்  டெல்லியின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதற்கான ஆவன நடவாடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல்  உடன்  நமக்கு உரிய பதிலையும் பெற்றுத்தந்த நம்முடைய சம்மேளன முன்னாள் மாபொதுச்  செயலர்  தோழர். M  கிருஷ்ணன் அவர்களுக்கும் நம்முடைய நன்றி என்றென்றும் உரித்தாகும் ! 

தேர்வில் கலந்துகொள்ள இயலாமல் விடுபட்ட  தோழர்கள் மீண்டும் மகிழ்வுடன் தேர்வு எழுதிடவும்  வெற்றி வாய்ப்பைப் பெற்றிடவும்  நம் மாநிலச் சங்கத்தின்  மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செய்தியை பார்த்திடாத  தோழர்கள் எவரேனும்   உங்கள் பகுதியில் இருப்பின் தயவு செய்து  அவர்களுக்கு இந்த தகவலைத் தெரிவித்திட வேண்டுகிறோம்!    நன்றி !.