Tuesday, November 11, 2014

Posting of Information relating to Working Hours etc. on "Indian Government Websites."

கோட்ட/கிளைச் செயலர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

அரசு உத்திரவுகள் ,அலுவலக வேலை நேரம் , விடுமுறை நாட்கள் என அனைத்து செய்திகளையும் அரசே அந்தந்த இலாக்காக்களின் வலைத்தளத்தில் வெளியிட உத்திரவு இடும் போது ,
(கீழே பார்க்கவும் )

தினப்படி யான செய்திகளை , இலாக்கா உத்திரவுகளை , சங்கத்தின் செயல்பாடுகளை தெரிந்துகொள்ள  தினமும்  நம்முடைய சம்மேளன, அகில இந்திய மற்றும் மாநிலச் சங்கத்தின் வலைத்தளைத்தை பார்வையிட உறுப்பினர்களை  ஊக்கப் படுத்துங்கள். 

 SMS , EMAIL , FACE BOOK, WHATS APP  என்று உலகமே ஒரு நொடியில் உங்கள் கைகளில் வந்துவிடும்போது  இன்னும் என்ன தயக்கம் ? 

மூன்றாம் தலைமுறை இளைஞர்கள் வந்துவிட்டார்கள் ! முதல் தலைமுறை  , இரண்டாம் தலைமுறை  தலைவர்கள் அவர்கள் வேகத்திற்கு ஈடு செய்தால் மட்டுமே நாளைய தலைமுறையை  தொழிற்சங்க எல்லைக்குள் கொண்டு வரமுடியும் என்பது  நாம் உணர வேண்டிய முக்கிய அம்சமாகும். 

இல்லையெனில் நாம் அவர்களின் 'தொடர்பு எல்லைக்குள்' இல்லாமல் போய்விடுவோம் !  உண்மைதானே ?