Friday, July 31, 2015

TN NFPE COC MEETING/ RJCM STAFF SIDE MEETING/ TN CONFEDERATION MEETING/ CIRCLE WORKING COMMITTEE MEETING /RJCM MEETING

NEPE  தமிழ் மாநில இணைப்புக் குழு கூட்டம் 
மற்றும் RJCM  ஊழியர் தரப்பு கூட்டம் 

NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழு கூட்டம் அதன் கன்வீனர் தோழர். 
J . இராமமூர்த்தி அவர்களால் கடந்த 21.07.2015  மதியம் அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் அதன் தலைவர் தோழர். B . பரந்தாமன் அவர்கள் தலைமையில் கூட்டப்பட்டது. RJCM  இன் தலைவர் தேர்ந் தெடுத்தல் , CIRCLE WELFARE  BOARD  MEMBER  NOMINATION  மற்றும் RJCM க்கான பிரச்சினைகள் பெறுவது  குறித்து இந்தக் கூட்டம் கூட்டப் பட்டது. விவாதங்களின் முடிவில் கீழ்க் கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன.

NFPE  தமிழ் மாநில ஒற்றுமை காத்திட, அனைத்து சங்கங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளித்திட வேண்டி  

1.RJCM  தலைவராக  RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். K . ரமேஷ் அவர்களை பரிந்துரைப்பது.

(இதன் பின்னர்  FNPO  வுடன் நடைபெற்ற RJCM  STAFF SIDE  கூட்டத்தின் தோழர். K . ரமேஷ் அவர்கள் முறையாக  RJCM தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டு  மாநில நிர்வாகத்தாலும்  அங்கீகரிக்கப்பட்டார்  .)

2. இணைப்புக் குழுவின் தலைவராக  RMS  நான்கின் மாநிலச் செயலர் தோழர். B . பரந்தாமன் அவர்களே தொடர்வது.

3. அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர்  தோழர். J . இராமமூர்த்தி அவர்களே  RJCM  STAFF  SIDE  SECRETARY  யாகத் தொடர்வது. 

4. இணைப்புக் குழுவின் கன்வீனர் பதவியில் இருந்து  அஞ்சல் மூன்று சங்கம் விலகி , அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் அவர்களை இணைப்புக் குழுவின் கன்வீனராக நியமிப்பது.

5. CIRCLE WELFARE  BOARD  MEMBER  ஆக  AUDIT  & ACCOUNTS  சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். R .B . சுரேஷ் அவர்களை பரிந்துரைப்பது.

6. ADMIN  சங்கத்திற்கு RJCM  உறுப்பினர்  உரிமையை தொடர்வது.

7.NFPE  அமைப்பில் அங்கீகாரம் உள்ள மற்றொரு சங்கமான  SBCO  சங்கத்திற்கு அடுத்து வரும் வாய்ப்பை வழங்குவது.

8.எதிர்வரும்  02.09.2015அன்று நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தத்தை  தமிழகத்தில் வெற்றிகரமாக  நடத்துவது.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன 
வேலை நிறுத்த ஆலோசனைக் கூட்டம் 

தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் ஆலோசனை கூட்டம் கடந்த 29.07.2015 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ACCOUNTANT GENERAL  அலுவகத்தில் உள்ள சங்கக் கட்டிடத்தில் அதன் மாநிலத் தலைவர் தோழர்.  J . இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் , அதன் பொதுச் செயலாளர் தோழர். M . துரைபாண்டியன் அவர்கள் முன்னிலை யில் சிறப்பாக நடைபெற்றது. இதில் AG அலுவலகம், வருமான வரித் துறை,  கலால்  மற்றும் சுங்க வரித்துறை,  NIOT , CGHS . PRINTING /STATIONERY ,  சாஸ்த்ரி  பவன் ஊழியர் சங்கங்களின் இணைப்புக்  குழு, ராஜாஜி பவன்  ஊழியர் சங்கங்களின் இணைப்புக் குழு  உள்ளிட்ட  20 க்கும் மேற்பட்ட சங்கங்களில் இருந்து   அதன் நிர்வாகிகளும், மாநில அரசு ஊழியர் சங்கத்தில் இருந்து அதன் மாநிலச் சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.  

முதலில்  மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்  DR . அப்துல் கலாம் அவர்களின் மறைவை ஒட்டி அவருக்கு  நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர்  INTUC, AITUC, CITU, BMS, HMS, LPF உள்ளிட்ட   11 மைய தொழிற் சங்கங்களின் அறைகூவலை ஏற்று , தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுவதற்கு எதிராக, ரயில்வே,  அஞ்சல் உள்ளிட்ட அரசுத் துறைகள் தனியார் மையப் படுத்தப படுவதற்கு எதிராக, CGHS  MEDICAL  STORES , PRINTING  , STATIONERY  & PUBLICATION  போன்ற துறைகள் ஒழிக்கப் படுவதற்கு எதிராக ,   எதிர்வரும் 02.09.2015 அன்று நடைபெற உள்ள வேலை நிறுத்தத்தில்  தமிழகத்தின் அனைத்து மத்திய, மாநில, பொதுத் துறை, ஆசிரியர் சங்கங்கள்  முழுமையாக கலந்துகொள்வது என்று  முடிவு எடுக்கப்பட்டது. 

இதற்கான பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக ,  அனைத்து மத்திய , மாநில அரசு  ஊழியர்  சங்கங்கள் கலந்துகொள்ளும் ஒரு மாபெரும் கருத்தரங்கு நிகழ்ச்சியை  சென்னையில் உள்ள தி.நகர் ஜெர்மன் 
ஹாலில் எதிர்வரும் 18.08.2015  அன்று மாலை  சிறப்பாக நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அனைத்து சங்கங்களிலும் மாநிலம் தழுவிய அளவில் தனித் தனியே பிரச்சார இயக்கங்களை எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தி வேலை நிறுத்தத்தில் முழுமையாக ஊழியர்களை ஈடு படச் செய்வது என்றும் முடிவெடுக்கப் பட்டது. 

இறுதியாக , மகா சம்மேளனத்தின் மாநில நிதிச் செயலர் தோழர். 
S.சுந்தரமூர்த்தி (வருமான வரித்துறை ) அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

அஞ்சல் மூன்று மாநிலச் செயற்குழுக் கூட்டம் 

நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 04.08.2015 அன்று  காலை 10.00 மணி தொடங்கி  சென்னை எழும்பூர்  SRMU  சங்கக் கட்டிடத்தில் உள்ள  நக்கீரன் அரங்கில்  சிறப்பாக நடைபெற அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கை மாநிலச் சங்க நிர்வாகிகள்/ செயற்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே EMAIL  மற்றும் தபால் மூலம் முறையாக அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து  செயற்குழு உறுப்பினர்களும்/அழைப்பு அனுப்பப்பட்டுள்ள சிறப்பு அழைப்பாளர் களும்  தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாநில  கூட்டு ஆலோசனைக் குழுக் கூட்டம் 
மாநில கூட்டு ஆலோசனைக் குழு கூட்டம் (RJCM MEETING ) எதிர்வரும் 06.08.2015 அன்று  நடைபெறுவதாக  அறிவிக்கப் பட்டுள்ளது. இது கடைசியாக 2012 இல் நடைபெற்றது.  

நம்முடைய இடைவிடாத போராட்டத்தாலும், அகில இந்திய சங்க / சம்மேளன முயற்சியாலும் இது தற்போது நடைபெற  உள்ளது. இதில் நிர்வாகத் தரப்பில் CPMG  யை தலைவராகக் கொண்டு ஐந்து  PMG க்கள்  உறுப்பினராக கலந்துகொள்வர். 

ஊழியர் தரப்பில்   NFPE  சார்பாக 5 பேரும்  FNPO  சார்பாக இரண்டு பேரும் கலந்துகொள்வார்கள்  ஊழியர் தரப்பு தலைவராக  RMS  மூன்றின்  மாநிலச் செயலர் தோழர். K . ரமேஷ் அவர்களும் , ஊழியர் தரப்பு செயலராக  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J . இராமமூர்த்தி அவர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள். இதில் விவாதிப்பதற்காக தேங்கிக் கிடக்கும் பல்வேறு பிரச்சினைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் விபரம் தனியே வெளியிடப்படும்.

இந்த மாநில அளவிலான உச்ச மட்ட கூட்டம், கடந்த 2 மாதங்களில் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைத்த   புதிய CHIEF  PMG   DR . சார்லஸ்  லோபோ அவர்கள் தலைமையில்  நடைபெற உள்ளதால்  பிரச்சினைகளின் தீர்வுக்கு புதிய நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது . இதில்   நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.