Wednesday, January 27, 2016

PROTEST DEMONSTRATION BY TN NFPE COC AGAINST THE ARBITRARY DISENGAGING OF 27 CASUAL LABOURERS AT ANNA SALAI HPO RESULTANTLY COMBINING THE DUTIES OF THE POSTMAN/ MTS.

FIRST STEP POWERFUL PROTEST DEMONSTRATION AGAINST THE ARBITRARY DISENGAGING OF 27 CASUAL LABOURERS AT ANNA SALAI HPO RESULTANTLY COMBINING THE DUTIES OF THE POSTMAN/ MTS.
DEMONSTRATION UNDERTAKEN BY TN NFPE COC ON 25.01.2016 AT THE CLOSING HOURS IN FRONT OF O/O CPMG, TN. PL SEE SOME OF THE PHOTOS TAKEN DURING THE PROTEST DEMONSTRATION.
==============================================================================

சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் திடீரென்று CASUAL LABOURER களாக கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 27 ஊழியர்களை வெளியேற்றி சென்னை பெருநகரமண்டல நிர்வாகம் (இப்படித்தான் CHIEF POSTMASTER , ANNA  ROAD HPO பதில் அளித்துள்ளார்) அடாவடியாக உத்திரவிட்டது. ஆனால் PMG அவர்கள் இதற்கும் மண்டல நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என்கிறார்.

எவர் செய்தார் என்பது நமது கேள்வியல்ல. அது நிர்வாகத்தின் உள்விஷயம். இதனால் 27 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களால் விடுப்பு மற்றும் காலிப் பணியிடங்களில் செய்யப்பட்ட பணிகள் அனைத்தும் தற்போது பணி இணைப்பு செய்யப்பட்டு, இருக்கும் தபால்காரர்கள் மற்றும் MTS ஊழியர்களைக்  கொண்டு  செய்யப் பணிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத்தின் இந்த மனிதாபிமானமற்ற  நடவடிக்கையை கண்டித்தும் உடனே அந்த 27 ஊழியர்களையும் பணிக்கு கொண்டுவரக் கோரியும் சென்னை CPMG அலுவலகம் முன்பாக 25.01.2016 மாலை தமிழக அஞ்சல் RMS(NFPE) இணைப்புக் குழு சார்பாக மாபெரும் எழுச்சி மிக்க கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு இணைப்புக் குழு தலைவர் தோழர். பரந்தாமன் (R 4) தலைமை ஏற்க, முன்னோட்ட உரையினை இணைப்புக் குழு கன்வீனர் தோழர். கண்ணன்(P4) அவர்கள் வழங்க , விளக்கமாக பிரச்சினையை அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J. இராமமூர்த்தி எடுத்துப் பேச, RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். ரமேஷ் கண்டன உரையாற்ற, CASUAL, COTINGENT, PART TIME ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். சிவகுருநாதன் நன்றியுரை ஆற்ற , நூற்றுக் கணக்கான தோழிய/தோழர்களால் விண்ணதிரும் கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டு ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

புதன் காலை 11.00 மணியளவில் மண்டல நிர்வாகத்தால் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டிருக்கிறோம். FNPO COC தோழர்களும் இந்த பேச்சு வார்த்தைக்கு வருவதாக, கண்டன ஆர்ப்பட்டத்திற்குப் பின்னதான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.


பேச்சு வார்த்தை வெற்றியடைந்து அந்த 27 ஊழியர்களும் பணிக்கு திரும்பினால் மிகுந்த மகிழ்ச்சி. இல்லையேல் , அடுத்த கட்ட போராட்டம் அஞ்சல் JCA போராட்டமாக வீறு கொண்டு உடன் எழும் என்பதை நிர்வாகத்திற்கு அறிவிக்கிறோம். 

போராட்டம்  நடத்துவது  நமக்கு  விருப்பமும் அல்ல . பொழுது போக்குமல்ல. அப்பாவி  ஊழியர்களின்  வாழ்வாதாரமே  பாதிக்கப்பட்டால்,  வேடிக்கை பார்ப்பதும் தொழிற்சங்கமாக இருக்க முடியாது என்பதை நிர்வாகத்தில் உள்ளவர்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். நம் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். நிர்வாகம் பிரச்சினையை தீர்த்திட முயலவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நிகழ்வில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களை கீழே பார்க்கலாம்.